சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. 1997-ம் ஆண்டு 'நேருக்கு நேர்' படத்தின் மூலம் தொடங்கிய இவரது திரையுலக பயணம், பின்பு பல்வேறு முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து ஸ்டாராக உயர்ந்துள்ளார்.
'மெளனம் பேசியதே', 'காக்க காக்க', 'பிதாமகன்', 'ஆயுத எழுத்து', 'கஜினி', 'வாரணம் ஆயிரம்', 'அயன்', 'சிங்கம்' என இவருடைய நடிப்பில் உருவான பல படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இன்று (ஜூலை 23) தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார் சூர்யா.
இதனை முன்னிட்டு நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் என அனைவருமே தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் சூர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவருடைய ரசிகர்களோ ஜூலை மாதம் தொடங்கியதிலிருந்தே சூர்யாவின் பிறந்த நாளை சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு, 'சூரரைப் போற்று' படத்தின் 'காட்டுப் பயலே' பாடலின் ஒரு நிமிட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ட்விட்டர் தளத்தில் #HappyBirthdаySuriya, #HBDSuriya ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட்டாகி வருகிறது.
'சூரரைப் போற்று' படத்தைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாகும் 'அருவா' மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'வாடிவாசல்' ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சூர்யா. இதில் கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் எந்தப் படத்தைத் துவங்கவுள்ளார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago