'ஜானி' ரீமேக்கில் நடிக்க விரும்பிய அஜித்

By செய்திப்பிரிவு

மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி நடித்த 'ஜானி' படத்தில் ரீமேக்கில் நடிக்க அஜித் விரும்பியதாக ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி, ஸ்ரீதேவி, தீபா, பாலாஜி, சுருளி ராஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஜானி'. 1980-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் பாடல்கள், உருவாக்கம் என அனைத்துத் தரப்பிலும் பாராட்டைப் பெற்றது.

'ஜானி' படம் மட்டுமல்ல, மகேந்திரன் இயக்கத்தில் உருவான 'முள்ளும் மலரும்', 'உதிரிப்பூக்கள்', 'மெட்டி' உள்ளிட்ட அனைத்துப் படங்களும் இப்போது வரை கொண்டாடப்பட்டு வருகிறது. பல முன்னணி நடிகர்கள் இவரது படங்களின் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.

தற்போது 'ஜானி' ரீமேக்கில் அஜித் நடிக்க விரும்பியதாக, மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"அஜித்துக்கு ‘ஜானி’ படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்று ரொம்ப ஆசை. ஒருமுறை அப்பாவைச் சந்தித்துவிட்டுச் சென்றார். ‘ஜானி’ படத்தை ரீமேக் செய்ய விரும்பினால், தான் நடிக்க விரும்புவதாகவும், எனக்கு ரொம்பப் பிடித்த படம் சார் அது என்றும் அப்பாவிடம் அஜித் கூறினார்.

'ஜானி' படத்தை ரீமேக் செய்தால் கூட அஜித்துக்கு சரியா இருக்கும்டா என்றுதான் அப்பாவும் சொன்னார். ரீமேக்கில் அப்பா இயக்கத்தில்தான் அஜித்தும் நடிக்க ஆசைப்பட்டார். நீங்கள் விருப்பப்பட்டால் அந்தப் படத்தைத் தயாரிக்கவும் செய்வதாக அப்பாவிடம் அஜித் கூறினார். ஆனால், அப்பாவுக்கு எப்போதுமே ரீமேக் பண்ணுவதில் விருப்பமே கிடையாது".

இவ்வாறு ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்