இளம் நடிகர்கள் என்னோடு நடிக்கும்போது பதற்றமாக இருப்பதாகக் கூறுவது சாதனையல்ல: மனம் திறந்த நசீருதீன் ஷா

By பிடிஐ

பாலிவுட்டின் மூத்த நடிகர் நசீருதீன் ஷா, தொலைக்காட்சி, சினிமா, வெப்சீரிஸ் என்று இன்றளவும் ஓடிக்கொண்டிருப்பவர். 1967 ஆம் ஆண்டில் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கிய அவர் இதுவரை 100க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

திரையுலகில் 45 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நசீருதீன் ஷா மூன்று முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

தனது திரையுலகப் பயணம் பற்றி நசீருதீன் ஷா கூறியுள்ளதாவது:

''இளம் நடிகர்கள் என்னோடு நடிக்கும்போது பதற்றமாக இருப்பதாகக் கூறுகிறார்கள். இதை நான் ஒரு சாதனையாகக் கருதவில்லை. என்னுடைய இருப்பு ஒரு சக நடிகரைத் தொந்தரவு செய்கிறதென்றால் அது சாதனையோ, கவுரவமோ கிடையாது. அவர்களுடைய பதற்றத்தைக் குறைக்க நான் முயற்சி செய்கிறேன். ஆனால், அதில் நான் எப்போதும் வெற்றி பெறுவதில்லை.

என்னை விட மூத்த நடிகர்களான திலீப் குமார், ஷான் கானரி, அஷோக் குமார் ஆகியோரின் இருப்பு என்னை தொந்தரவு செய்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. எனவே என்னுடைய இருப்பு ஒரு நடிகரைத் தொந்தரவு செய்வது நல்ல விஷயமல்ல''.

இவ்வாறு நசீருதீன் ஷா கூறியுள்ளார்.

விரைவில் அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள ‘பேன்டிஷ் பேன்டிட்ஸ்’ என்ற தொடரில் நசீருதீன் ஷா நடித்துள்ளார். இதில் அவரோடு அதுல் குல்கர்னி, குணால் ராய் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்