கெளதம் மேனன் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்தார்கள்.
கௌதம் மேனன் இயக்கத்தில் கமல், ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில், 2006-ம் ஆண்டு வெளியான படம் 'வேட்டையாடு விளையாடு'. மாணிக்கம் நாராயணன் தயாரிப்பில் உருவான இந்தப் படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவாளராகவும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்திருந்தனர்.
பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் படத்தின் 2-ம் பாகம் பேச்சுவார்த்தையில் இருக்கிறது. கெளதம் மேனன் இயக்கத்தில் கமல் நடிக்க, அந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 'வேட்டையாடு விளையாடு 2' படத்தின் கதைக்கு திரைக்கதையையும் முழுமையாக எழுதி முடித்துவிட்டார் கெளதம் மேனன்.
இதனிடையே, இந்தப் படத்தில் கமலுக்கு நாயகியாக அனுஷ்கா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. தற்போது அனுஷ்காவுக்கு பதிலாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கீர்த்தி சுரேஷ் தரப்பில் விசாரித்த போது, "ஒரு படத்தில் நடிப்பதற்கு முதலில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். இதுவரை 'வேட்டையாடு விளையாடு 2' படம் தொடர்பாக கீர்த்தியிடம் யாருமே பேசவில்லை. ஆகையால் இந்தச் செய்தியில் உண்மையில்லை" என்று தெரிவித்தார்கள்.
» தற்கொலையா கொலையா - சுஷாந்தைப் போலவே இருக்கும் டிக்டாக் நட்சத்திரத்தை வைத்து புதிய திரைப்படம்
» தங்கக் கடத்தல் விவகாரம்: மலையாளத் திரையுலகிற்குத் தொடர்பா?
இதனால் கமல் படத்தில் கீர்த்தி சுரேஷ் என்று வெளியாகியுள்ள செய்தியில் உண்மையில்லை என்பது தெளிவாகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago