பிரபல இயக்குநர் ரஜத் முகர்ஜி மறைவு: பாலிவுட் பிரபலங்கள் இரங்கல்

By பிடிஐ

2002 ஆம் ஆண்டு மனோஜ் பாஜ்பாயி, விவேக் ஓபராய் நடிப்பில் வெளியான ‘ரோட்’ மற்றும் ‘ப்யார் துனே க்யா கியா’ ஆகிய படங்களை இயக்கியவர் ரஜத் முகர்ஜி.

கடந்த சில மாதங்களாக கிட்னி பிரச்சினையால் அவதிப்பட்டு வந்துள்ளார் ரஜத் முகர்ஜி. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த சனிக்கிழமை இரவு 8 மணியளவில் மருத்துவமனைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய அவருக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரது மனைவி அவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ரஜத் முகர்ஜியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

ரஜத் முகர்ஜியின் உடல் ஜெய்ப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மனோஜ் பாஜ்பாயி, அனுபவ் சின்ஹா, ஊர்மிளா மடோன்ட்கர், ஹன்ஸல் மேத்தா ஆகியோர் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் ரஜத் முகர்ஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மனோஜ் பாஜ்பாயி: ‘ரோட்’ படப்பிடிப்பு நாட்கள் எப்போதும் என் நினைவிலேயே இருக்கும். உங்களால்தான் அதிக மகிழ்ச்சியுடன் அப்படத்தை நாம் உருவாக்கினோம். மீண்டும் நாம் சந்திக்கவோ நம் பணிகளைப் பற்றி உரையாடவோ முடியாது என்பதை நம்பவே முடியவில்லை எனதருமை நண்பா. எங்கிருந்தாலும் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.

ஊர்மிளா: இந்த அற்புதமான அரிய படத்தை எடுத்த திறமையான மற்றும் உற்சாகமான நபர். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் நண்பரே.

ஹன்ஸல் மேத்தா: நாங்கள் பம்பாயில் கஷ்டப்பட்ட காலத்திலிருந்தே நண்பர்கள். நிறைய உணவு, நிறைய ஓல்ட் மங்க் பாட்டில்களை உட்கொண்டிருக்கிறோம். இன்னும் உட்கொள்ளவேண்டிய பல விஷயங்கள் மறு உலகத்தில் உள்ளன. போய் வாருங்கள் நண்பா!

அனுபவ் சின்ஹா: இன்னொரு நண்பரும் வெகு சீக்கிரமாகப் போய்விட்டார். இயக்குநர் ரஜத் முகர்ஜி. கடந்த சில மாதங்களாக பல்வேறு உடல் உபாதைகளால் இன்னலுக்கு ஆளாகியிருந்தார். நல்லபடியாக போய் வாருங்கள் நண்பரே!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்