தியாகராஜன் குமாரராஜாவுடன் பணிபுரிந்தது என் அதிர்ஷ்டம் என்று நடிகர் ஃபகத் பாசில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சூப்பர் டீலக்ஸ்'. விமர்சன ரீதியாக இப்படம் பலராலும் கொண்டாடப்பட்டது. இந்தியத் திரையுலகின் பல்வேறு முன்னணி இயக்குநர்களும் இப்படத்தைக் கொண்டாடினார்கள்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பில் நூற்றுக்கணக்கான டேக்குகளை தியாகராஜன் குமாரராஜா எடுத்ததாக, நடிகர்கள் அளித்த பேட்டிகளில் தெரிவித்துள்ளனர். அந்தளவுக்கு ஒவ்வொரு காட்சியையும் ரொம்பவே மெனக்கிட்டு படமாக்கியதாகவும் நடிகர்கள் குறிப்பிட்டார்கள்.
தற்போது ஃபகத் பாசில் அளித்துள்ள பேட்டியில் கூட தியாகராஜன் குமாரராஜா படமாக்கும் முறை குறித்துப் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
» சீரியல்களின் புதிய அத்தியாயங்கள் எப்போது? - விஜய் டிவி அறிவிப்பு
» நெட்ஃப்ளிக்ஸில் அதிக முறை பார்க்கப்பட்ட படங்களின் பட்டியல் வெளியீடு - ‘எக்ஸ்ட்ராக்ஷன்’ முதலிடம்
"தியாகராஜன் குமாரராஜா படப்பிடிப்பில் 200 டேக்குகள் எல்லாம் சராசரி தான். என் விஷயத்தில் 55-550 டேக் கூட சென்றிருக்கிறது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், நான் 60-65 டேக்குகள் கடந்து செல்கிறேன் என்பது எனக்குத் தெரியும்.
அப்போது குமாரராஜா வந்து 'அந்த 17வது டேக்கில் பார்வை சரியாக இருந்தது, ஆனால் 12வது டேக்கில் பேசிய விதம் நன்றாக இருந்தது, ஆனால் மொத்தமாகப் பார்த்தால் 35-வது டேக் எனக்குப் பிடித்திருந்தது' என்பார். இப்படியான உயர்ந்த திறமைகளுடன் பணியாற்றியது என் அதிர்ஷ்டமே.
இதே போலத்தான் திலீஷும், மகேஷும் கூட இருப்பார்கள். அவர்களுடன் பணியாற்றாமல் நம்மால் இருக்க முடியாது"
இவ்வாறு ஃபகத் பாசில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
சினிமா
26 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago