நெட்ஃப்ளிக்ஸில் அதிக முறை பார்க்கப்பட்ட படங்களின் பட்டியல் வெளியீடு - ‘எக்ஸ்ட்ராக்‌ஷன்’ முதலிடம்

By செய்திப்பிரிவு

கரோனா நெருக்கடி காரணமாக உலக அளவில் பெரும்பாலானவர்கள் வீடுகளில் முடங்கியுள்ள வேளையில், தொலைக்காட்சி, கணிப்பொறியைத் தாண்டி நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களின் மூலம் புதிய திரைப்படங்கள், தொடர்களைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே நெட்ஃப்ளிக்ஸில் புதிதாக 1 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். ஜூன் மாதம் முடிவில் உலக அளவில் நெட்ஃப்ளிக்ஸுக்கு சந்தா செலுத்தியுள்ளவர்கள் எண்ணிக்கை 19.3 கோடி என்ற அளவில் உள்ளது.

இந்நிலையில் அதிக முறை பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலை நெட்ஃப்ளிக்ஸ் தளம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் அந்தந்த படங்கள் வெளியாகி முதல் நான்கு வாரங்களில் பார்க்கப்பட்ட எண்ணிக்கையை அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் நடித்த ‘எக்ஸ்ட்ராக்‌ஷன்’ திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த படம் வெளியான நான்கு வாரங்களில் 10 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது. சாண்ட்ரா புல்லக் நடித்த ‘பேர்ட் பாக்ஸ்’, மார்ட்டின் ஸ்கார்செஸியின் ‘தி ஐரிஷ்மேன்’ ஆகிய படங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ள அதிக முறை பார்க்கப்பட்ட திரைப்படங்களின் எண்ணிக்கை இதோ:

எக்ஸ்ட்ராக்‌ஷன் (9.9 கோடி பார்வைகள்)

பேர்ட் பாக்ஸ் (8.9 கோடி பார்வைகள் )

ஸ்பென்சர் கான்ஃபிடன்ஷியல் (8.5 கோடி பார்வைகள் )

6 அண்டர்கிரவுன்ட் (8.3 கோடி பார்வைகள்)

மர்டர் மிஸ்ட்ரி (7.3 கோடி பார்வைகள் )

தி ஐரிஷ்மேன் ( 6.4 கோடி பார்வைகள்)

ட்ரிபிள் ஃப்ரோன்ஷியர் ( 6.3 கோடி பார்வைகள் )

தி ராங் மிஸ்ஸி ( 5.9 கோடி பார்வைகள்)

தி ப்ளாட்ஃபார்ம் (5.6 மில்லியன்பார்வைகள் )

தி பெர்ஃபெக்ட் டேட் (4.8 கோடி பார்வைகள் )

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்