2019ஆம் ஆண்டு அதிகம் புகார் செய்யப்பட்ட படம் ‘ஜோக்கர்’

By ஐஏஎன்எஸ்

டிசி காமிக்ஸ் வில்லனான ஜோக்கர் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ‘ஜோக்கர்’. ஹாக்கின் ஃபீனிக்ஸ் நடித்த இப்படத்தை டோட் பிலிப்ஸ் இயக்கியிருந்தார். படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஜோக்கராக நடித்த ஹாக்கின் ஃபீனிக்ஸுக்கு பத்திரிகைகளிடமிருந்தும், விமர்சகர்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. இப்படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதும் வழங்கப்பட்டது.

17 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும் ஆர் ரேட்டட் படமான ‘ஜோக்கர்’ உலகமெங்கும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்தது. இதுவரை வெளியான ஆர் ரேட்டட் படங்களில் அதிக தொகை வசூலித்த படம் இதுவே.

இந்நிலையில் இப்படம் இங்கிலாந்தில் 2019 ஆண்டின் அதிக புகார்களை பெற்ற திரைப்படம் என்று பிரிட்டிஷ் திரைப்பட வகைப்படுத்தல் வாரியம் (பிபிஎஃப்சி) தெரிவித்துள்ளது.

இதுவரை இப்படத்துக்கு எதிராக 15 புகார்கள் வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான புகார்கள் இப்படத்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே அனுமதிக்கவேண்டும் என்றும், இப்படம் தடை செய்யப்படவேண்டும் என்று இருந்ததாகவும் பிபிஎஃப்சி கூறியுள்ளது.

ஆனால் இப்படத்தின் புகார்களின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டான 2018ஆம் ஆண்டு வெளியான ‘ரெட் ஸ்பாரோ’ திரைப்படத்தை காட்டிலும் குறைவு. அப்படத்துக்கு எதிராக வந்த புகார்களின் எண்ணிக்கை மொத்தம் 64.

அதே போல 2008ஆம் ஆண்டு நோலனின் இயக்கத்தில் வெளியான ‘தி டார்க் நைட்’ படத்துக்கு எதிரான புகார்களின் எண்ணிக்கை 364 என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்