நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்கும் மெகா பட்ஜெட் படம் : அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

2009ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் க்ரேனி என்பவர் எழுதிய நாவல் ‘தி க்ரே மேன்’. அந்த ஆண்டின் அதிகம் விற்பனையான நாவலான இதை திரைப்படமாக எடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் அவை யாவும் செயல்வடிவம் பெறவில்லை.

தற்போது இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரிலேயே ஒரு மெகா பட்ஜெட் படத்தை தயாரிக்க நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இப்படத்தை இயக்கும் பொறுப்பு ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ படத்தை இயக்கிய ருஸ்ஸோ சகோதரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கேப்டன் அமெரிக்காவாக நடித்து புகழ்பெற்ற க்றிஸ் எவான்ஸ், ரயான் கோஸ்லிங் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் பட்ஜெட் இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.1300 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சிஐஏ அதிகாரிகளான இரண்டு கொலைகாரர்களுக்கு இடையே நடக்கும் மோதலை பற்றி இந்நாவல் பேசுகிறது. பல ஆண்டுகளாக இந்நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்ட நடிகர் ப்ராட் பிட் பின்னர் அதை கைவிட்டார்.

இது குறித்து ருஸ்ஸோ சகோதரர்களில் ஒருவரான ஆண்டனி ருஸ்ஸோ கூறியிருப்பதாவது:

சிஐஏ-வின் வேறுபட்ட முகத்தை பிரதிபலிக்கும் இரண்டு பேருக்கு இடையில் நடக்கும் போட்டியே இப்படம். கேப்டன் அமெரிக்காவின் ரசிகர்களை இப்படம் ஒரு புதிய உலகத்துக்குள் கொண்டு செல்லும். இது எங்களுக்கு மிகவும் முக்கியமான படம். இந்த படத்துக்கு நெட்ஃப்ளிக்ஸ் மட்டுமே சரியான இடமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கரோனா ஊரடங்கு காலத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் புதிதாக ஒரு கோடி பேர் சந்தாதாரர்களாக இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்