சீரியல்களின் புதிய அத்தியாயங்கள் எப்போது? - சன் டிவி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தங்களுடைய சீரியல்களின் புதிய அத்தியாயங்கள் எப்போது என்பதை சன் டிவி அறிவித்துள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டன. கடந்த மாதம் சின்னத்திரை படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி அளித்தாலும், பல்வேறு முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. சில சீரியல்களின் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மீண்டும் சீரியல் படப்பிடிப்பு தடைப்பட்டது.

ஜூலை 8-ம் தேதி முதல் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டது. இதில் சீரியல்கள் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போது, பல நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் நடிகர்கள் மாற்றப்பட்டு படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டது.

மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டாலும், முன்னணி சீரியல்களின் புதிய அத்தியாயம் எப்போது என்ற கேள்வி அனைவருக்குள்ளும் இருந்தது. இந்தக் கேள்விக்கு முதல் ஆளாக பதிலளித்துள்ளது சன் டிவி.

தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் "உங்கள் அபிமான மெகா தொடர்கள், புதிய திருப்பங்களோடு, உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் புத்தம் புதிய எபிசோடுகளுடன் வருகிறது. ஜூலை 27 முதல், உங்கள் சன் டிவியில்" என்று சன் டிவி தெரிவித்துள்ளது.

இந்த ட்வீட்டில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் 'மகராசி', 'பாண்டவர் இல்லம்', 'சந்திரலேகா', 'ரோஜா', 'கல்யாண வீடு', 'நாயகி', 'கண்மணி' ஆகிய சீரியல்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்