பொதுத் தேர்வுகளில் 58 சதவீத மதிப்பெண்களே எடுத்தேன் - மாதவன் பகிர்வு

By ஐஏஎன்எஸ்

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் முடிவுகளை நேற்று (ஜூலை 16) அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் 92.3% மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர்.

தேர்ச்சியடைந்த மாணவ மாணவிகளுக்கு பிரபலங்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர. அத்துடன் சிலர் தங்களின் 12ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களையும் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்தனர்.

இந்நிலையில் நடிகர் மாதவன் பொதுத் தேர்வுகளில் தான் 58% சதவீத மதிப்பெண்களே எடுத்ததாக பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

பொதுத் தேர்வு முடிவுகளில் தாங்கள் எதிர்பார்த்த அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள். மீதியுள்ளவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, நான் என்னுடைய பொதுத் தேர்வுகளில் 58% சதவீதம் மதிப்பெண்களே எடுத்திருந்தேன். இன்னும் ஆட்டம் ஆரம்பிக்கவே இல்லை என் அன்பு நண்பர்களே.

இவ்வாறு மாதவன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்