என் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான நபர் கார்த்திக் சுப்புராஜ்: விஜய் சேதுபதி

By செய்திப்பிரிவு

என் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான நபர் கார்த்திக் சுப்புராஜ் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'பீட்சா' மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். அந்தப் படத்துக்கு முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய சில குறும்படங்களிலும் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

'பீட்சா' படத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'இறைவி' மற்றும் 'பேட்ட' உள்ளிட்ட படங்களிலும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது தனது திரையுலக வாழ்க்கையில் கார்த்திக் சுப்புராஜ் எவ்வளவு முக்கியமான நபர் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் தொடர்பாக விஜய் சேதுபதி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

"என் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான நபர். அவருடைய குறும்படத்தில் நடித்தவுடன்தான் எனக்கு மன உறுதியே வந்தது. அவருடைய 4 குறும்படங்களில் நடித்தேன். உலகம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.

முதலில் நம் மீது நமக்கு நம்பிக்கை வரவேண்டும் அல்லவா. அந்த நம்பிக்கையை எனக்குள் விதைத்தது அவருடைய குறும்படங்கள்தான். சீரியல்களில் நடிக்கும்போது ரொம்ப பயந்து பயந்து நிற்பேன்.

சி.ஜே.பாஸ்கர் சாரால் தான் கேமரா பயம் போனது. மனஉறுதி வந்தது கார்த்திக் சுப்புராஜால்தான். நம்மை மீறி நம் மீது ஒருவர் நம்பிக்கை வைப்பது பெரிய விஷயம். அந்த நம்பிக்கையை மணிகண்டன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இருவருமே வைத்தார்கள். அப்புறம் சீனு ராமசாமி சார் வைத்தார்".

இவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்