சாம் மெண்டிஸ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘1917’. முதலாம் உலகப் போரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் சிறந்த ஒலிப்பதிவு, சவுன்ட் மிக்ஸிங் உள்ளிட்ட 3 பிரிவுகளுக்கான ஆஸ்கர் விருதை வென்றது.
ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது போல அமைக்கப்பட்ட காட்சிகளை கொண்ட இப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தை இயக்கிய அனுபவம் குறித்து சாம் மெண்டிஸ் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
முதல் உலகப் போரில் கலந்த கொண்ட அனுபவங்களை பற்றி என் தாத்தா என்னிடம் கூறியபோது போர் என்றால் என்ன என்று நான் புரிந்துகொண்டேன். இந்த படம் என் தாத்தாவை பற்றியது அல்ல. மாறாக அவர்களுடைய தன்னம்பிக்கை, தியாகங்கள், அவர்கள் கடந்து வந்த பாதை ஆகியவற்றை பற்றியது.
» அல்லு அர்ஜுன் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்
» 'பிக் பாஸ்' சீசன் 4 தொடங்க வாய்ப்பு உள்ளதா? - விஜய் டிவி விளக்கம்
கதையில் இரண்டு பிரதான கதாபாத்திரங்களும் 1600 வீரர்களின் உயிரை காப்பாற்றக் கூடிய ஒரு முக்கிய தகவலை ஒப்படைக்க எதிரிகளின் பகுதியை கடந்து செல்கின்றனர். கேமராவும் அவர்களை விட்டு விலகுவதே இல்லை. அவர்கள் இருவரது ஒவ்வொரு அடியோடும் நான் பயணம் செய்ய விரும்பினேன். அது தான் என் வாழ்வின் மிக மகிழ்ச்சியான தருணம்.
இவ்வாறு சாம் மெண்டிஸ் கூறினார்.
‘1917’ படத்தின் ஜார்ஜ் மெக்கே, டீன் - சார்லஸ் சாப்மேன், பெனடிக்ட் கும்பர்பேட்ச் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago