தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் ஃபகத் பாசில் நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சூப்பர் டீலக்ஸ்'. விமர்சன ரீதியாக இப்படம் பலராலும் கொண்டாடப்பட்டது. இந்தியத் திரையுலகின் பல்வேறு முன்னணி இயக்குநர்களும் இப்படத்தைக் கொண்டாடினார்கள்.
இந்தப் படத்துக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இன்னும் தனது அடுத்த படத்தை அறிவிக்கவில்லை. 'ஆரண்ய காண்டம்' படம் வெளியாகி 8 ஆண்டுகளுக்குப் பிறகே 'சூப்பர் டீலக்ஸ்' படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
'சூப்பர் டீலக்ஸ்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ஃபகத் பாசில் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக ஃபகத் பாசில் அளித்த பேட்டியில், "நான் அவரது அடுத்த படத்தில் இருக்கிறேன். அதைத் தனியாகச் சொல்லவே வேண்டாம். அது தானாக இருக்கும் ஒரு விஷயம். கண்டிப்பாக நான் அதில் இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago