நினைவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தோம் என உணரவில்லை: யுவன் உருக்கம்

By செய்திப்பிரிவு

நினைவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தோம் என உணரவில்லை என்று மறைந்த நா.முத்துக்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு யுவன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் வரிசையில் தனித்தடம் பதித்தவர் நா.முத்துக்குமார். பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றிய அவர், சீமான் இயக்கிய ‘வீரநடை’ படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆனார்.

'காதல் கொண்டேன்', 'பிதாமகன்', 'கில்லி', 'கஜினி', 'நந்தா', 'புதுப்பேட்டை', 'காதல்', 'சந்திரமுகி', 'சிவாஜி', 'கற்றது தமிழ்', '7 ஜி ரெயின்போ காலனி', 'காக்கா முட்டை', 'தெறி' உள்ளிட்ட பல படங்களில் நா.முத்துக்குமார் எழுதிய பாடலகள் பெரிய வரவேற்பைப் பெற்றவை.

யுவன் - நா.முத்துக்குமார் கூட்டணி என்பது இசை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். 4 ஆண்டுகளுக்கு முன்பு காற்றில் கரைந்து போன நா.முத்துக்குமாரின் 45-வது பிறந்த நாள் இன்று!

நா.முத்துக்குமார் பிறந்த நாளை முன்னிட்டு இசையமைப்பாளர் யுவன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"நாங்கள் நினைவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தோம் என்று நாங்கள் உணரவில்லை. நாங்கள் வெறும் பாடல்களை மட்டுமே உருவாக்குவதாக நம்பிக் கொண்டிருந்தோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்"

இவ்வாறு யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE