1993 ஆம் ஆண்டு வெளியாகி உலகையே திரும்பிப் பார்க்க வைத்த படம் 'ஜுராசிக் பார்க்'. ஸ்பீல்பெர்க் இயக்கிய இப்படம் இன்று வரை ஹாலிவுட் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. இப்படத்தின் மூன்றாம் பாகம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தோடு ஜுராசிக் பார்க் படங்களை இயக்கும் பொறுப்பிலிருந்து ஸ்பீல்பெர்க் விலகிக் கொண்டார்.
அதன்பிறகு 14 வருடங்களுக்குப் பிறகு ஜுராசிக் பார்க்கின் தொடர்ச்சியாக ‘ஜுராசிக் வேர்ல்டு’ படம் வெளியானது. க்றிஸ் ப்ராட் நடிப்பில் கோலின் ட்ரெவாரோ இயக்கிய இப்படம் உலகமெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஏற்கெனவே இரண்டு பாகங்கள் வெளியாகியிருக்கும் நிலையில் மூன்றாம் பாகமான ‘ஜுராசிக் வேர்ல்டு: டாமினியன்’ படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. ஆனால் கரோனா அச்சுறுத்தலால் இப்படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பை யுனிவர்சல் ஸ்டுடியோஸ் நிறுவனம் மீண்டும் லண்டனில் தொடங்கியுள்ளது. மேலும் படக்குழுவினரில் ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்திக்கு யுனிவர்சல் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
» அனுபம் கெரின் தாயார், சகோதரர் குடும்பத்தினருக்கு கரோனா தொற்று
» சாலை மற்றும் ரவுண்டானாவுக்கு சுஷாந்த் பெயர்: சொந்த மாவட்ட மக்களின் கோரிக்கை ஏற்பு
இதுகுறித்து யுனிவர்சல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாவது:
'' ‘ஜுராசிக் வேர்ல்டு: டாமினியன்’ படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை. படப்பிடிப்புத் தொடங்கப்பட்டு ஐந்து நாட்கள் ஆகிவிட்டன. இந்த அபாரமான படத்தின் படப்பிடிப்பில் கேமராவின் முன்னால் மீண்டும் நிற்பது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது''.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago