உலகம் முழுக்கப் பல மொழிகளில் திரைப்படங்கள் உருவானாலும், பெரும்பாலான படங்கள் பேசும் ஒரே மொழி காதல்தான். அதேசமயம், தன்பாலின உறவாளர்களின் காதலைச் சித்தரிக்கும் வெகுஜன சினிமாக்களின் எண்ணிக்கை வெகு சொற்பமே. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதலைக் கவித்துவமாகச் சித்தரிப்பது போல் தன்பாலின உறவாளர்களுக்கிடையிலான காதலின் ஈரத்தை இயக்குநர் ஆங் லீயின் ‘ப்ரோக்பேக் மவுன்டெய்ன்’ (Brokeback Mountain) போன்ற ஒரு சில படங்களே பதிவு செய்திருக்கின்றன.
அந்தப் போக்கு இப்போது மாறி வருகிறது. அண்மைக் காலமாகத் திரைப்படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் தன்பாலின உறவாளர்களின் உறவுகள், கதையின் முக்கிய அங்கமாகச் சித்தரிக்கப்பட்டு வருகின்றன. வெகுஜன சினிமாவில் தன்பாலின உறவாளர்கள் ஜோடி பிரதானமானதாகச் சித்தரிக்கப்படவில்லை என்ற நீண்ட நாள் குறையையும் நேற்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கும் ‘தி ஓல்ட் கார்ட்’ (The Old Guard ) திரைப்படம் தீர்த்து வைத்துள்ளது. இத்திரைப்படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும் சூப்பர் ஹீரோ கதை என்பது மேலும் சிறப்பு.
அழிவில்லா அமரர்கள்
மேற்கத்திய நாடுகளில் பிரபலமான ‘தி ஓல்டு கார்ட்’ (The Old Guard) காமிக்ஸைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம். போர்க்களத்தில் ஏற்படும் விசித்திர விபத்தின் காரணமாகச் சாகாவரம் பெற்ற ஐந்து பேரை மையமாகக் கொண்ட கதை இது. இவர்களில் மூத்தவரான ஆண்டி (Andy) எனும் பெண் பல நூறு வருடங்கள், பல போர்களில் போரிட்டு அனுபவம் கொண்டவர். சில நூற்றாண்டுகள் கழித்து தன்னைப் போல் சக்தி பெற்ற மற்றொருவரைக் கண்டுபிடிப்பார். இப்படியே பல நூறு ஆண்டுகள் இடைவெளியில் மற்ற மூவரையும் கண்டடைவார். இவர்கள் எதிர்கொள்ளும் சவால்தான் படத்தின் கதை.
» இந்துக்களின் மனதை புண்புடுத்தும் போஸ்டர்?: ‘சடக் 2’ படக்குழுவினர் மீது வழக்கு
» பாலிவுட் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் வாரிசு அரசியல் உண்டு: அதிதி ராவ்
இவர்களில் ஜோ மற்றும் நிக்கி என்ற இரண்டு ஆண்களும் தன்பாலின உறவாளர்கள். 1,000 ஆண்டுகளுக்கு முன்பு லத்தீன் தேவாலயங்களால் மத்தியக் கிழக்கு நாடுகளில் நடத்தப்பட்ட புனிதப் போரில், எதிர் எதிர் அணியில் போரிட்டு ஒருவரை ஒருவர் கொல்ல முயற்சித்து பின்பு சாகாவரம் பெற்றவர்கள்.
சாகாவரத்துடன், ஆயிரம் ஆண்டுகளுக்கான காதலையும் இருவரும் கண்டெடுப்பார்கள். எதிரிகளிடம் மாட்டிக்கொள்ளும்போது நிக்கி மீதான தன் காதலை ஜோ உணர்வுபூர்வமாக விவரிக்கும் அந்தக் காட்சி திரையுலகின் புதிய பாதைகளைத் திறந்து வைத்துள்ளது என்பதை மறுக்க முடியாது. தன்பாலின உறவாளர்கள் என்றாலே பலவீனமானவர்கள் என்ற பொதுப் புத்தியை அடித்து நொறுக்கும் வகையில் இவர்களின் சண்டைக் காட்சிகளும் இத்திரைப்படத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஜோ மற்றும் நிக்கி ஜோடிக்குப் பெரும் வரவேற்பு அளித்துவரும் ரசிகர்கள் இவர்களின் காதலைக் காணவே இரண்டாம் பாகத்துக்குக் காத்திருக்கின்றனர். மார்வெல் மற்றும் டிசி காமிக்ஸ் புத்தகங்களுக்குப் பல கதைகள் எழுதியிருக்கும் க்ரெக் ரூக்காதான் இதன் கதாசிரியர் என்பது ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.
பாலிவுட் எடுக்கும் முற்போக்கான முயற்சிகள்
வெகுஜன சினிமா என்றால் சூப்பர் ஹீரோ கதைகள் மற்றும் நகைச்சுவைக் கதைகளுக்கே முதலிடம். ஹாலிவுட்டில் இதற்கு முன்பு ‘டெட் பூல்’ திரைப்படத்தின் மூலக் கதையான காமிக்ஸில் கதையின் நாயகன் வேட் வில்சன், தான் ஒரு பான் செக்ஸுவல் (Pan Sexual) என்று தன் பாலியலை அடையாளப்படுத்திக் கொள்வார். ஆனால், திரைப்படத்தில் அது இலைமறை காயாகக் காட்டப்பட்டிருக்கும்.
சமீபகாலமாக நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ‘செக்ஸ் எஜுகேஷன்’ தொடரில் தன்பாலின உறவாளர்களின் காதலை உணர்வுபூர்வமாகக் காட்சிப்படுத்தியது பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளிவந்த ‘ஷுப் மங்கள் சாவதான்’ படம், தன்பாலின உறவின் மீது சமூகத்தில் இதுவரை இருந்த இறுக்கத்தைத் தகர்த்தெறிந்தது.
விரைவில் இந்த மாற்றம் தமிழ் சினிமாவிலும் நடக்கக்கூடும். என்னதான் புரையோடிப்போன மூடநம்பிக்கைகள் மண்டிக் கிடந்தாலும், காதல் அனைத்தையும் தகர்த்தெறிந்து சிறகடிக்கும். அதற்கான ஆரம்பத்தை ‘தி ஓல்டு கார்ட்’ தொடங்கி வைத்துள்ளது.
- க.விக்னேஷ்வரன்
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago