சர்ச்சையில் சிக்கியுள்ள பிதா

By செய்திப்பிரிவு

மிஷ்கின் தயாரிப்பில் உருவாகும் பிதா படத்தின் போஸ்டரால் சர்ச்சை உருவாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு 'பிதா' என்ற புதிய படத்தின் பூஜை நடைபெற்றது. இதன் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி, பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

மிஷ்கினின் தம்பி ஆதித்யா இயக்கவுள்ள இந்தப் படத்தில் கலையரசன், ஆர்.ஜே.ரமேஷ் திலக், அனு கீர்த்தி வாஸ், ராதாரவி, மதியழகன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக அறிவித்தது படக்குழு. இதில் 'மஹா' மற்றும் 'பாக்ஸர்' படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் வில்லனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை மிஷ்கின், ஸ்ரீ கிரீன் சரவணன் மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டார்கள். மேலும், மூவரின் லோகோக்களும் படத்தின் போஸ்டரில் இடம்பெற்றது. இது தான் இப்போது சர்ச்சையாகியுள்ளது.

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில் சிறு கடிதத்தை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

"எங்கள் நிறுவனத்தின் லோகோவை ஸ்ரீக்ரீன் நிறுவனம் தயாரிக்கும் 'பிதா' என்ற படத்தின் போஸ்டரில் பார்த்தோம். அந்தப் படத்துக்கும் எங்களுக்கு எந்தவித தொடர்புமே இல்லை. ஆகையால், இனிமேல் எங்களுடைய நிறுவனத்தின் பெயரையோ, லோகோவையோ போஸ்டரில் உபயோகிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்"

இவ்வாறு மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. அதற்கு படத்தின் போஸ்டரில் இன்னொரு நிறுவனத்தின் லோகோவை உபயோகப்படுத்தி சர்ச்சையில் சிக்கியிருக்கிறது படக்குழு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

29 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்