'பாகுபலி' படம் வெளியாவதற்கு முந்தைய நாள் தான், தன் வாழ்நாளில் மிகவும் கடினமான நாள் என்று 'பாகுபலி' தயாரிப்பாளர் ஷோபு தெரிவித்துள்ளார்.
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'. இதில் கதை முடியாத காரணத்தால், 2-ம் பாகத்தை 'பாகுபலி 2' என்ற பெயரில் உருவாக்கி வெளியிட்டது படக்குழு.
இதில் இன்று (ஜூலை 10) 'பாகுபலி' முதல் பாகம் வெளியான நாள். இன்றோடு இந்தப் படம் வெளியாகி 5 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்று, 2-ம் பாகத்துக்கான வழியை அமைத்துக் கொடுத்தது.
'பாகுபலி' வெளியாகி 5 ஆண்டுகள் ஆனதையொட்டி, பிரபாஸ் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் சமூக வலைதளத்தில் விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். இதனிடையே, நேற்றிரவு (ஜூலை 9) தன் வாழ்நாளில் கடினமான நாள் என்று 'பாகுபலி' தயாரிப்பாளரான ஷோபு தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக 'பாகுபலி' தயாரிப்பாளர் ஷோபு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நேரத்தில் நாங்கள் எப்படி இருந்தோம் என்று ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். இது தான் என் வாழ்நாளில் மிகவும் கடினமான நாளாக இருந்தது. ஆனால் அதைக் கடந்து வந்தது மகிழ்ச்சி"
இவ்வாறு 'பாகுபலி' தயாரிப்பாளர் ஷோபு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago