'அறிந்தும் அறியாமலும்' படத்தின் மூலம் பிரபலமான சமிக்ஷா, சிங்கப்பூர் தொழிலதிபரை இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார்.
'அறிந்தும் அறியாமலும்', 'மனதோடு மழைக்காலம்', 'தீ நகர்', 'மெர்க்குரி பூக்கள்' உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர் சமிக்ஷா. தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், இந்தி, பஞ்சாபி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். மேலும், சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
தற்போது சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் பாடகர் ஷஹீல் ஆஸ்வலை இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார் சமிக்ஷா. இருவரது திருமணம் சிங்கப்பூரில் ஜூலை 3-ம் தேதி நடைபெற்றது. இதில் சமிக்ஷாவின் குடும்பத்தினர் வீடியோ மூலமாகவே கலந்து கொண்டனர்.
ஷஹீல் ஆஸ்வல் - சமிக்ஷா இருவருக்குமே இது 2-வது திருமணமாகும். ஷஹீல் ஆஸ்வலுக்குத் திருமணமாகி 2 குழந்தைகளும், சமிஷ்காவுக்கு 1 குழந்தையும் உள்ளனர். இருவருமே விவாகரத்து பெற்றவர்கள்.
சமிக்ஷாவின் புகைப்படங்களைப் பார்த்து தனது மியூசிக் வீடியோவுக்காக சிங்கப்பூருக்கு அழைத்துள்ளார் ஷஹீல் ஆஸ்வல். அதன் படப்பிடிப்பில் இருவருக்குமே காதல் மலர்ந்து, திருமணம் செய்து கொண்டனர். மேலும், இனிமேல் மும்பை திரும்பப் போவதில்லை எனவும், மாமனாரின் தயாரிப்பு நிறுவனத்தை மேற்பார்வையிட உள்ளதாகவும் சமிக்ஷா அறிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
38 mins ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago