விஜய் சேதுபதி, பார்த்திபன் நடிப்பில் உருவாகும் 'துக்ளக் தர்பார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.
'மாமனிதன்', 'லாபம்', 'கடைசி விவசாயி', 'க/பெ ரணசிங்கம்', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'துக்ளக் தர்பார்' உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வந்தார் விஜய் சேதுபதி. கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு படத்தின் பணியும் நடைபெறாமல், வீட்டில் குழந்தைகளுடன் பொழுதைக் கழித்து வருகிறார்.
இதில் அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'துக்ளக் தர்பார்'. இதில் விஜய் சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு சுமார் 50% வரை முடிந்துவிட்டது.
தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. 'நானும் ரவுடிதான்' படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி - பார்த்திபன் கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளது. முழுக்க அரசியல் பின்னணி கொண்ட களமாக இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் டெல்லி பிரசாத் தீனதயாளன்.
» ஓடிடி தளத்தில் வெளியாகிறதா 'ஜகமே தந்திரம்'?
» மீண்டும் அவெஞ்சர்ஸ் இயக்குநர்களுடன் இணையும் ‘அயர்ன்மேன்’ ராபர்ட் டவுனி ஜூனியர்?
ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தை 'மாஸ்டர்' படத்தின் இணை தயாரிப்பாளரும், 'கோப்ரா', 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'சீயான் 60' உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வரும் லலித் குமார் தயாரித்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
17 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago