கரோனா பாதிப்பால் மேடை நாடகம், திரையரங்குகள் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதால், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற ஸ்ட்ரீமிங் சேவை தளங்கள் உதவி செய்ய வேண்டும் என்று 'ஸ்கைஃபால்', '1917' படங்களின் இயக்குநர் சாம் மெண்டிஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் சாம் மெண்டிஸ் கோரிக்கை வைத்த ஒரு மாதத்துக்குப் பிறகு, கரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக அவருடன் இணைந்து நிதியுதவி செய்ய நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதற்காக சொசைட்டி ஆஃப் லண்டன் தியேட்டர் மற்றும் யுகே தியேட்டர் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து 5 லட்சம் பவுண்டுகள் நிதி வழங்கியுள்ளது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம். இதன் மூலம் ஒரு நபருக்கு 1000 பவுண்டுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் 2019 தொடக்கம் முதல் 2020 மார்ச் 31 வரை மேடை நாடகங்களில் பணியாற்றியிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
» சுஷாந்த் நடித்த 'தில் பெச்சாரா' ட்ரெய்லர் வெளியீடு: ஒரே நாளில் 2.2 கோடி பார்வைகள் கடந்து சாதனை
இதுகுறித்து சாம் மெண்டிஸ் கூறியிருப்பதாவது:
''பாதிக்கப்பட்ட மேடை நாடகப் பணியாளர்கள் இந்த உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கலாம். உணவுக்கு வழியில்லாத, தங்களுடைய கட்டணங்களைச் செலுத்தமுடியாத, வேறு வேலைக்குச் செல்லமுடியாத மேடை நாடகக் கலைஞர்களுக்காகவே இந்த நிதி தொடங்கப்பட்டுள்ளது''.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago