இந்தியாவில் கோவிட்-19 தொற்றுப் பரவல் மற்றும் அதைக் கட்டுப்படுத்த எடுத்துவரப்படும் நடவடிக்கைகள் குறித்துத் தயாராகியுள்ள ஆவணப்படத்துக்கு இயக்குநர் கெளதம் மேனன் குரல் கொடுக்கவுள்ளார்.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த இந்தியாவில் எடுக்கப்பட்டுள்ள அனைத்து முக்கிய நடவடிக்கைகள் குறித்து டிஸ்கவரி ப்ளஸ் சேனலில் ஒரு ஆவணப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. COVID-19: India’s War Against The Virus என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படம், இந்தியாவின் ஊரடங்கு காலகட்டத்தில் பிரத்யேகமாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
துறை வல்லுநர்கள், களப் பணியாளர்கள், நோயாளிகள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் இந்த நோயைக் கட்டுப்படுத்த திரை மறைவில் வேலை செய்யும் அத்தனை பேரைப் பற்றியும், வர்ணனை மற்றும் பேட்டிகள் மூலமாக இந்த ஆவணப்படம் சொல்கிறது. மேலும் இந்தத் தொற்றை எதிர்கொள்ள தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் ஆவணப்படம் சொல்லும்.
பல்வேறு விஞ்ஞானிகள், மருத்துவர்கள், அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் இதில் இடம்பெறவுள்ளனர். இந்த ஆவணப்படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும், இந்தி பதிப்புக்கு நடிகர் மனோஜ் பாஜ்பாயும் வர்ணனைக் குரல் கொடுக்கவுள்ளனர்.
இதுகுறித்துப் பேசியுள்ள கெளதம் மேனன், ''நான் பங்காற்றியுள்ள படைப்புகளிலிருந்து இந்த ஆவணப் படத்தை வித்தியாசப்படுத்துவது, நாம் அனைவருமே இந்தத் தொற்றினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளோம் என்ற யதார்த்தமே. இதைப் பார்க்கப் பார்க்க நம் வாழ்வின் ஒரு பகுதியை நாம் மீண்டும் வாழ்ந்து பார்ப்போம்.
அதே நேரம், நமக்குத் தெரியாத பல விஷயங்கள் குறித்து இந்த ஆவணப்படம் சொல்கிறது. அதனால்தான் ஒரு பொழுதுபோக்குக் கருவியாக, ஆவணப்படங்களுக்கு என் மனதில் பெருமைக்குரிய ஒரு இடமுண்டு. இது ஒரு துணிச்சலான முயற்சி. நான் முதன்முதலில் குரல் கொடுக்க இதை விடச் சிறந்த படைப்பை நான் எதிர்பார்த்திருக்க முடியாது. அதுவும் குறிப்பாக எனது தாய்மொழி தமிழில். இதுதான் எனது முதல் ஆவணப்படமும் கூட'' என்று கூறியுள்ளார்.
''இது ஒரு முக்கியமான கதை. அதைத் தாக்கத்துடன் கூற வேண்டியது அவசியம். இதில் பங்கெடுப்பதில் பெருமை'' என்று மனோஜ் பாஜ்பாய் கூறியுள்ளார்.
ஜூலை 16-ம் தேதி இரவு 8 மணிக்கு இந்த ஆவணப்படம் டிஸ்கவரி ப்ளஸ் சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது. ஜூலை 20-ம் தேதி இரவு 8 மணிக்கு, டிஸ்கவரி, டிஸ்கவரி வேர்ல்ட் ஹெச்.டி. ஆகிய சேனல்களில் ஒளிபரப்பாகவுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago