மிஷ்கின் தயாரிப்பில் உருவாகும் 'பிதா' படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.
'மஹா' மற்றும் 'பாக்ஸர்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வருபவர் மதியழகன். 'பாக்ஸர்' படத்தில் அருண் விஜய்க்கு வில்லனாக நடிக்கவுள்ளதை சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது மிஷ்கின் தயாரிப்பில் உருவாகும் 'பிதா' படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளார்.
இப்படத்தை மிஷ்கினின் தம்பி ஆதித்யா இயக்கவுள்ளார். இவர் மிஷ்கின், ராம் நடித்த 'சவரக்கத்தி' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 'பிதா' படத்தை மிஷ்கின் மற்றும் ஸ்ரீ கிரீன் சரவணன் மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது.
ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவை மையமாகக் கொண்டு உருவாகும் படமே 'பிதா'. காணாமல் போன தன் மகளை எப்பாடு பட்டேனும் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று தீவிரமாகத் தேடும் ஒரு தந்தையின் வலியைப் பதிவு செய்யும் படமாக இது உருவாகிறது.
» இளைஞர் காங்கிரஸ் போராட்டம்: மலையாள நடிகர் சங்கக் கூட்டம் ரத்து
» 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குச் செல்வீர்களா? - ரம்யா பாண்டியன் பதில்
இன்று (ஜூலை 6) காலை சென்னையில் சிறிய அளவில் படத்தின் பூஜை நடைபெற்றது. இந்தப் படத்தில் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மட்டும் இதில் கலந்துகொண்டனர். இந்தப் படத்தில் கலையரசன், ஆர்.ஜே.ரமேஷ் திலக், அனு கீர்த்தி வாஸ், ராதாரவி, மதியழகன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும், சில நடிகர்களையும் இதில் நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் ஒளிப்பதிவாளர் பிரசன்ன குமார் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரியவுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago