விவசாயி ஆன இயக்குநர் பாண்டிராஜ்

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கினால் இயக்குநர் பாண்டிராஜ் விவசாயி ஆக மாறியிருக்கிறார்.

'பசங்க', 'வம்சம்', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை' உள்ளிட்ட பல வரவேற்புப் பெற்ற படங்களை இயக்கியவர் பாண்டிராஜ். அடுத்ததாக இயக்கவுள்ள படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே கரோனா ஊரடங்கு அறிவிக்கப்படும்போதே தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார் பாண்டிராஜ்.

அங்கு தனது தந்தையால் விவசாயம் செய்ய முடியாது என்று கைவிடப்பட்ட நிலத்தினைச் சமன்படுத்தி, மண் மாற்றி விவசாயம் செய்யத் தொடங்கியுள்ளார் பாண்டிராஜ். காலையிலேயே குடும்பத்தினருடன் நிலத்துக்குச் சென்றுவிட்டு மாலையில்தான் வீடு திரும்புகிறார்.

தற்போது தனது நிலத்தில் வெண்டைக்காய், கொத்தவரங்காய் உள்ளிட்ட சில காய்கறிகளைப் பயிரிட்டுள்ளார். மேலும், தென்னை, மா ஆகிய மரக் கன்றுகளையும் நட்டுள்ளார். இந்த விவசாயப் பணிகளுடன் இணைந்து தனது அடுத்த படத்துக்கான கதையையும் கவனித்து வருகிறார்.

முன்னதாக, சென்னையில் இருக்கும்போது பாண்டிராஜ் தனது வீட்டில் கூட சுற்றிலும் தோட்டம் அமைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்