ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'டெடி' திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
ஆர்யா நடிப்பில் சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள படம் ‘டெடி’. திருமணத்துக்குப் பிறகு ஆர்யா - சயீஷா ஜோடியாக நடித்துள்ள முதல் படம் இது. இயக்குநர் மகிழ் திருமேனி, கருணாகரன், சதீஷ், சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆர்யாவுடன் முழுக்கவே டெடி பொம்மை வருவது போன்ற கதை என்பதால் அதிகமான கிராபிக்ஸ் காட்சிகள் இருந்தன. இதனால் நீண்ட நாட்களாக இதன் பணிகள் நடைபெற்று வந்தன.
சமீபத்தில் வெளியிடப்பட்ட 'டெடி' படத்தின் டீஸர் மற்றும் பாடலுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படமும் திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. தற்போது தயாராகி இருக்கும் படங்களை ஓடிடி நிறுவனங்கள் டிஜிட்டல் வெளியீட்டுக்குக் கைப்பற்றி வரும் நிலையில் 'டெடி' படக்குழுவினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
» இணையம் வழியே யோகா பயிற்சி அளிக்கும் ஐஸ்வர்யா தனுஷ்
» 'மர்டர்' பட விவகாரம்: பிரனய் தந்தை புகார்; சிக்கலில் ராம் கோபால் வர்மா
இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் பட்சத்தில், 'டெடி' படமும் ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்புள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago