இணையம் வழியே யோகா பயிற்சி அளிக்கும் ஐஸ்வர்யா தனுஷ்

By செய்திப்பிரிவு

தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வழியே யோகா பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்.

கரோனா அச்சுறுத்தலால் பல்வேறு நடிகர்கள், தங்களுடைய பொழுதுபோக்கினை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். பலரும் சமையல், உடற்பயிற்சி எனப் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்கள்.

இதனிடையே, ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வழியாக யோகா வகுப்பு எடுக்கத் தொடங்கியுள்ளார். இவர் சமீபத்தில் பகிர்ந்த யோகா செய்யும் புகைப்படங்களுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தன.

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வழியே யோகா கற்றுக்கொடுக்கத் தொடங்கியுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்.

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

"அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக, மகிழ்ச்சியாக இருப்பீர்கள் எனறு நம்புகிறேன். பல மாதங்களாக ஊரடங்கில் முடங்கிக் கிடந்தாலும் அனைவரும் மிகவும் வலுவாக இருக்கிறோம் என்பது உற்சாகத்தைக் கொடுக்கிறது. ஊரடங்கு என்பது உடல்நலம் மற்றும் மனநலனைப் பாதிக்கக்கூடும் என்பது அனைவரும் அறிந்ததே.

எனவே மனநலனிலும், உடல்நலத்திலும் நாம் அதிக அக்கறை செலுத்த வேண்டும். ஒவ்வொரு புதன்கிழமையும் 'Wellness Wednesday With Aishwaryaa' என்ற பெயரில் யோகாசனம், மனநலப் பயிற்சி, ஊட்டச்சத்து குறித்துப் பகிர்ந்து கொள்ள உள்ளேன்".

இவ்வாறு ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் இயக்குநராக வலம் வரும் ஐஸ்வர்யா தனுஷ், '3' மற்றும் 'வை ராஜா வை' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது 'சினிமா வீரன்' என்ற படத்தை இயக்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

36 mins ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்