சுஷாந்தின் தந்தை கே.கே. சிங் தனது மகனின் மறைவு குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி, இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். இவருடைய மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் என அனைவருமே இரங்கல் தெரிவித்தார்கள்.
சுஷாந்த் சிங் மறைவுக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் வாரிசு நடிகர்களின் பக்கத்திற்கே சென்று நெட்டிசன்கள் பலர் அவர்களைத் திட்டித் தீர்த்து வருகின்றனர். இதனால் பல நடிகர்கள் சமூக வலைதளங்களில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாலிவுட்டின் வாரிசு நடிகர்கள் கொடுத்த அழுத்தத்தினாலேயே சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார் என்றும் இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
» சுஷாந்த் தற்கொலை; கங்கணாவிடம் விசாரணையா?- சமூக வலைதளக் குழு மறுப்பு
» வாரிசு அரசியலை கணக்கிடும் ‘நெபோமீட்டர்’ - சுஷாந்த் குடும்பத்தினர் விளக்கம்
இந்நிலையில் சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் தனது மகனின் மறைவு குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
''என் மகன் சுஷாந்தின் ஆன்மா அழுகிறது. சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது. என் மகன் சுஷாந்த் மிகவும் தைரியமானவர், அவர் தற்கொலை செய்யமாட்டார் என்பது எனக்குத் தெரியும். இது ஒரு கொலை என்றாலும் அவரது மரணத்தை தற்கொலை என்று நிரூபிக்கும் முயற்சி நடந்து வருகிறது. இந்த விவகாரத்தை சிபிஐ தனது கையில் எடுக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்''.
இவ்வாறு கே.கே.சிங் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago