சுதா கொங்கரா இயக்கியுள்ள வெப் சீரிஸின் பின்னணி

By செய்திப்பிரிவு

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸில் யாரெல்லாம் நடித்துள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சூரரைப் போற்று' படத்தை இயக்கியுள்ளார் சுதா கொங்கரா. இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, தணிக்கையும் செய்யப்பட்டுவிட்டது. கரோனா ஊரடங்கு முடிந்து, திரையரங்குகள் திறக்கப்படும்போது வெளியாகும் முதல் படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, விஜய் படத்தை சுதா கொங்கரா இயக்கப் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவுபெறவில்லை. தற்போது தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார் சுதா.

இதனிடையே, 'சூரரைப் போற்று' படத்துக்குப் பின் சத்தமின்றி வெப் சீரிஸுக்கான ஒரு பகுதியை இயக்கி முடித்துள்ளார் சுதா . நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்துக்காக வெற்றிமாறன், கெளதம் மேனன், விக்னேஷ் சிவன் மற்றும் சுதா கொங்கரா ஆகியோர் இணைந்து ஒரு ஆந்தாலஜி படமொன்றை இயக்கியுள்ளனர். அனைவருடைய படமுமே அரை மணி நேரம் கொண்ட படமாக இருக்கும்.

சுதா கொங்கரா இயக்கியுள்ள படத்தில் காளிதாஸ் ஜெயராம், சாந்தனு மற்றும் பவானி ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர். பழநிக்கு அருகிலேயே ஒட்டுமொத்தமாகப் படமாக்கி முடித்துள்ளார். நெட்ஃப்ளிக்ஸ் உருவாக்கியுள்ள இந்த ஆந்தாலஜி படத்தின் ஒவ்வொரு கதையுமே ஆணவக் கொலையைப் பின்னணியாகக் கொண்டதாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சினிமா

35 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

மேலும்