'மைதான்' வெளியீட்டுத் தேதி மாற்றம்

By செய்திப்பிரிவு

அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள 'மைதான்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது.

அமித் ஷர்மா இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மைதான்'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் வெளியீடு பாதிக்கப்பட்டுள்ளது. படத்துக்காகப் போடப்பட்ட அரங்குகள் அனைத்தையும் படக்குழு அகற்றிவிட்டது. இதனால் படத்தின் வெளியீட்டில் மாற்றம் இருக்கும் என்று தகவல் வெளியானது.

இந்த ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி வெளியாகவிருந்த இந்தப் படத்தை தற்போது 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு மாற்றிவிட்டது படக்குழு. கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

1950-லிருந்து 63 வரை, இந்தியக் கால்பந்து அணியின் மேனேஜராகவும், பயிற்சியாளராகவும் இருந்த சையத் அப்துல் ரஹீமின் பயணத்தைச் சொல்லும் படமே ’மைதான்’. அவர் 1951 மற்றும் 1962 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணியை வெற்றிக்கு வழிநடத்திச் சென்றவர்.

இந்தியக் கால்பந்து அணியின் பொற்காலத்தில் பயிற்சியாளராக இருந்தவரைப் பற்றியும், ஆட்டத்துக்கு அவரது அற்புதமான பங்களிப்பைப் பற்றியும் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதே இந்தப் படத்தின் சிறப்பம்சமாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்