பிரபல ஓடிடி தளத்தின் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார்.
விஷால் நடித்த 'ஆக்ஷன்' படத்தைத் தொடர்ந்து, தமிழில் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார் தமன்னா. தெலுங்கில் 'சீட்டிமார்' எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தியிலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தக் கரோனா ஊரடங்கில் வீட்டில் தனது குடும்பத்தினருடன் பொழுதைக் கழித்து வருகிறார். தற்போது புதிதாக தெலுங்கில் நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கவுள்ளார் தமன்னா. சமீபத்தில் தெலுங்குத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பாளரான அல்லு அரவிந்த் ஓடிடி தளமொன்றைத் தொடங்கியுள்ளார்.
இதில் வெளியிட பல்வேறு படங்களின் டிஜிட்டல் உரிமையையும் கைப்பற்றி வருகிறார். இதில் புதிதாக வரவுள்ள நிகழ்ச்சிக்குத்தான் தமன்னாவைத் தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளனர். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. ஒரு எபிசோடுக்கு சம்பளம் என்ற முறையில் தமன்னாவுக்குச் சம்பளம் வழங்கப்பட உள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago