யாருடைய இயக்கத்தில் நடிக்க ஆசை மற்றும் இயக்குநர் ஆவீர்களா உள்ளிட்ட கேள்விகளுக்கு நடிகர் நெப்போலியன் பதிலளித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர், எம்எல்ஏ, எம்.பி.யாக இருந்தவர் நடிகர் நெப்போலியன். மகனின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேறிவிட்டார். அங்கு ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
சாம் லோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டேவில்ஸ் நைட்' படத்தில் ஹாலிவுட் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் நெப்போலியன். இந்தப் படத்தின் வெளியீட்டுக்குத் திட்டமிட்டபோது கரோனா அச்சுறுத்தல் தொடங்கிவிட்டது. இதனால் முதலில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் உள்ள ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட்டுள்ளனர். விரைவில் இந்தியாவிலும் ஓடிடி தளங்களில் வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது இந்தப் படத்தை விளம்பரப்படுத்த அமெரிக்காவில் இருந்துகொண்டே ஜூம் செயலி மூலமாக பேட்டியளித்தார் நெப்போலியன். யாருடைய இயக்கத்தில் நடிக்க ஆசை, இயக்குநர் ஆவீர்களா உள்ளிட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
» 45 லட்ச ரூபாய் கையாடல்: பெண் கணக்காளர் மீது விஷால் மேலாளர் புகார்
» பாலிவுட்டின் புகழ்பெற்ற நடன இயக்குநர் சரோஜ் கான் மாரடைப்பால் காலமானார்
அந்தப் பகுதி:
இன்னும் யாருடைய இயக்கத்தில் நடிக்க ஆசை?
பாலசந்தர் சார் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் அது நடக்காமல் போய்விட்டதே என்ற வருத்தமுண்டு. அவருடைய தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா நிறுவனம் தயாரித்த 'ஐயா' படத்தில் சரத்குமார் சாருடன் நடித்துவிட்டேன். சிவாஜி சாருடன் நடிக்கவில்லையே என்ற வருத்தமுண்டு. அவரோடு 3 படங்கள் வரை கமிட்டாகி மிஸ் ஆகிவிட்டது. மற்றபடி அனைவருடனும் நடித்துவிட்டேன்.
நடிகர், அரசியல்வாதி எனக் கடந்து ஹாலிவுட் படம் வரை போய்விட்டீர்கள். அடுத்து படம் இயக்குவீர்களா?
குருநாதர் பாரதிராஜா படங்களில் நடித்ததால் அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். படம் இயக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், உள்ளுக்குள் ஒரு பயமும் இருக்கிறது. இதெல்லாம் நமக்குத் தேவையா என்ற எண்ணமும் உள்ளது.
இவ்வாறு நெப்போலியன் பதில் அளித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago