'லக்‌ஷ்மி பாம்' படத்துக்காகப் புடவை உடுத்தியது நல்ல அனுபவம்: அக்‌ஷய் குமார்

'லக்‌ஷ்மி பாம்' படத்துக்காகப் புடவை உடுத்தியது நல்ல அனுபவம் என்று அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

2011-ம் ஆண்டு தமிழில் ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்திருந்த படம் 'காஞ்சனா'. தற்போது 'லக்‌ஷ்மி பாம்' என்கிற பெயரில் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி நடிக்க, லாரன்ஸ் இயக்கத்தில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

கரோனா நெருக்கடியால் தற்போது இந்தத் திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் வெளியிடாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. இதை அறிவிக்கும் நிகழ்வில் 'லக்‌ஷ்மி பாம்' படம் குறித்தும், புடவை அணிந்து நடித்தது குறித்தும் பேசியுள்ளார் அக்‌ஷய் குமார்.

"இந்தப் படத்துக்காகப் புடவை உடுத்தியது நல்ல அனுபவம். புடவை ஒரு நல்ல உடை. எல்லா அளவில் இருப்பவர்களுக்கும் சரியாக இருக்கும். புடவை அணிந்து ஓடும் பேருந்து, ட்ரெய்னில் ஏறும் பெண்களை, தினசரி வேலை செய்யும் பெண்களைப் பார்க்கிறோம். என்னால் புடவையில் நடக்கக்கூட முடியவில்லை. இதை உடுத்திச் சமாளிக்கும் பெண்களுக்கு வாழ்த்துகள். இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் நீங்கள் புடவை உடுத்திப் பார்த்தால்தான் தெரியும்" என்று அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE