'மாஸ்டர்' படத்தில் தனது கதாபாத்திரத்தின் தன்மை குறித்து பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் லலித் கைப்பற்றியுள்ளார். இதன் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.
ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகியிருக்க வேண்டிய படம், கரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு நிலைமை சீரானவுடன், தீபாவளிக்கு வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது. ஆனால், அதற்குள் நிலைமை சீராகுமா என்பது கேள்விக்குறிதான்.
இதனிடையே, இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழுவினர் தரப்பில் இதுவரை எதுவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
» 'பிகில்' சாதனையை முறியடிக்க சில காலம் எடுக்கும்: அர்ச்சனா கல்பாத்தி
» காவல்துறையில் இப்படிப்பட்ட கொடுமையா? - சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக எஸ்.ஏ.சி. காட்டம்
தற்போது நேரலைப் பேட்டியொன்றில் வில்லனாக நடிப்பீர்களா என்ற கேள்விக்கு விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது:
" 'மாஸ்டர்' படத்தில் கொடூரமான வில்லனாக நடித்துள்ளேன். அதில் துளி கூட நான் நல்லவன் அல்ல. ஒரே மாதிரியான கேரக்டர் பண்ணுவதில் விருப்பமில்லை. எந்தவொரு கதாபாத்திரமும் புதிதாக இருந்தால் பண்ணுவேன். அதுவும் யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பண்ணுவேன்".
இவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 mins ago
சினிமா
13 mins ago
சினிமா
47 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago