59 சீன செயலிகளுக்கு தடை - பாலிவுட் பிரபலங்கள் வரவேற்பு

By ஐஏஎன்எஸ்

இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சறுத்தலாக இருப்பதாகக் கூறி ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் சீனாவைச் சேர்ந்த 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நேற்றுத் தடை விதித்தது. இந்தத் தடையில் புகழ்பெற்ற டிக்டாக், யுசி பிரவுசர், ஷேர் இட், கேம் ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு செயலிகள் இடம் பெற்றிருந்தன

ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். பிளாட்பார்ம்களில் மொபைல் செயலிகள் பயனர்களின் தகவல்களை திருடி வெளிநாடுகளில் இருக்கும் சர்வர்களுக்கு விற்பகப்படுவதாக மத்திய அ ரசுக்கு புகார்கள் வந்ததையடுத்து, இந்த தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் மத்திய அரசின் இந்த தடை அறிவிப்பு பல்வேறு பாலிவுட் பிரபலங்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மலாய்கா அரோரா: இந்த ஊரடங்கில் நான் கேட்ட மிகச்சிறந்த செய்தி இதுதான். ஒருவழியாக இனி மக்களின் கேலிக்குரிய வீடியோக்களை பார்க்க வேண்டியிருக்காது.

கரண்வீர் போஹ்ரா: அரசின் இந்த நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கிறது. இது அவர்கள் நாட்டுக்கு என்ன செய்து விடும் என்று சிலர் கேட்கின்றனர். ஒவ்வொரு செயல்பாடும் முக்கியமானதுதான். இது ஒரு நல்ல தொடக்கம்.

கவுஷல் டாண்டன்: மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒருவழியாக நல்ல செய்தி கிடைத்து விட்டது.

அமிஷா படேல்: மிகவும் சிறப்பான செய்தி. இந்த நாளை மகிழ்ச்சிகரமாக ஆக்கியுள்ளது.

இவர்களில் இசையமைப்பாளர் விஷால் தத்லானி மட்டுமே இந்த அறிவிப்பை விமர்சித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சீன செயலிகளை தடை செய்வது கரோனாவுக்கு தீபங்களை ஏற்றுவது போன்றது’ என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE