மனைவி ஆலியாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய நவாசுதின் சித்திக்

By ஐஏஎன்எஸ்

தனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவிக்கு சட்டப்பூர்வ அறிவிப்பை (லீகல் நோட்டீஸ்) நவாசுதின் சித்திக் அனுப்பியுள்ளார்.

மோசடியில் ஈடுபட்டது, வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்பியது ஆகிய குற்றச்சாட்டுகளை தனது நோட்டீஸில் நவாசுதின் குறிப்பிட்டுள்ளார். மேலும், மே 7 அன்று ஆலியா அனுப்பிய விவாகரத்து நோட்டீஸுக்கு, 15 நாட்களுக்குள், அதாவது மே 19 அன்று நவாசுதின் பதிலளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் ஒரு பேட்டியில், நவாசுதின் மாதா மாதம் தனக்கு தர வேண்டிய பணத்தை நிறுத்திவிட்டதாகவும், இதனால் தனது குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை என்றும் புகார் கூறியிருந்தார். இதையும் நவாசுதினின் வழக்கறிஞர் மறுத்துள்ளார்.

"மாதாந்திர தவணையை இன்னும் நவாசுதின் கட்டி வருகிறார். குழந்தைகள் தொடர்பான மற்ற செலவுகளையும் ஏற்றுள்ளார். விவாகரத்து நோட்டீஸுக்கு பதிலளிக்கப்பட்டுவிட்டது. ஆனால் நன்றாக திட்டமிட்டு அவதூறு பரப்பும் முயற்சியில் ஒரு பகுதியாக, நவாசுதின் பதிலளிக்கவில்லை என்று பேசி வருகிறார்" என்று நவாசுதினின் வழக்கறிஞர் அத்னன் ஷேக் கூறியுள்ளார்.

தன்னைப் பற்றிய அவதூறு கருத்துக்களைப் பேச வேண்டாம் என்றும் நவாசுதின் இந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் ஆலியா பேசிய விஷயங்கள் அனைத்துக்கும் நவாசுதின் எழுத்துப்பூர்வமாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE