‘டெட்பூல் 2’ படத்தை இயக்கிய டேவிட் லீச் ‘புல்லட் ட்ரெய்ன்’ படத்தில் இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘டெட்பூல் 2’, ‘ஹாப்ஸ் அன்ட் ஷா’, ‘அடாமிக் ப்ளாண்ட்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் டேவிட் லீச். இதில் ‘டெட்பூல் 2’ மற்றும் ‘ஹாப்ஸ் அன்ட் ஷா’ ஆகிய படங்கள் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்றவை.
இந்நிலையில் தற்போது டேவிட் லீச் ‘புல்லட் ட்ரெய்ன்’ என்ற படத்தில் இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘மரியா பீட்டில்’ என்ற புகழ்பெற்ற ஜப்பானிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகவுள்ளது. ஒரு ரயிலில் இருக்கும் போட்டி மனப்பான்மை கொண்ட கூலிப்படையினரையும், கொலைகாரர்களையும் சுற்றி நடக்கும் கதை. இக்கதையை ஹாலிவுட்டுக்கு ஏற்றபடி தழுவி ஜாக் ஒல்கேவிச் என்பவர் எழுதுகிறார்.
» மீண்டும் தள்ளிப்போன ‘டெனெட்’ ரிலீஸ் தேதி - வார்னர் ப்ரதர்ஸ் அறிவிப்பு
» கரோனாவை கட்டுப்படுத்த அரசின் புதிய வழி: நீரவ் ஷா நக்கல் பதிவு
லீச் மற்றும் கெல்லி மெக்கார்மிக் உடன் இணைந்து இப்படத்தை ஆண்டனி ஃபுர்கா, கேட் சாமிக் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
அமெரிக்காவின் பிரபல பதிப்பகமான ஹார்வில் சாக்கர் ‘மரியா பீட்டில்’ நாவலை ஆங்கிலத்தில் ‘புல்லட் ட்ரெய்ன்’ என்ற பெயரிலேயே வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
47 mins ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago