இயக்குநர் மைக்கல் பே என்னைத் தவறாக நடத்தவில்லை: நடிகை மேகன் ஃபாக்ஸ் விளக்கம்

By செய்திப்பிரிவு

'ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்' திரைப்படங்களின் இயக்குநர் மைக்கல் பே தன்னைத் தவறாக நடத்தவில்லை என்று நடிகை மேகன் ஃபாக்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

11 வருடங்களுக்கு முன்பு, நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த நடிகை மேகன் ஃபாக்ஸ், தனது 15-வது வயதில் தான் காட்சிப்பொருளைப் போல் நடத்தப்பட்டது குறித்து நினைவுகூர்ந்தார். 'பேட் பாய்ஸ் 2' திரைப்படத்தில் துணை நடிகையாகத் தோன்றியபோது, பின்னணியில், ஒரு நீர்வீழ்ச்சியின் கீழ் நடனமாட வைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

திடீரென இந்தப் பழைய பேட்டி வைரலாக, மேகன் ஃபாக்ஸ், மைக்கேல் பே இருவரைப் பற்றியும் இன்னும் பல்வேறு விஷயங்கள் உறுதி செய்யப்படாமலேயே உலா வர ஆரம்பித்தன.

'ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்' படத்துக்காக நடிகர் தேர்வு நடக்கும்போது மேகன் ஃபாக்ஸை, மைக்கல் பே, அவரது காரைத் துடைக்க வைத்தார் என்ற வதந்தியும் அதில் ஒன்று. இந்நிலையில் அது வதந்திதான் என்பதை உறுதிப்படுத்தி மேகன் ஃபாக்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள மேகன் ஃபாக்ஸ், "அப்படி ஒரு படப்பிடிப்பு ஸ்டுடியோவுக்குள் பலரது முன்னிலையில் நடந்தது. நான் கவர்ச்சியாக உடை அணிந்திருக்கவில்லை. அப்போது எனது வயது 19-20 இருக்கும். நான் யாருடைய காரையும் துடைக்கவில்லை. திரைக்கதையில் இல்லாத எந்த விஷயத்தையும் யாரும் என்னைச் செய்ய வைக்கவில்லை. மேலும் மைக்கேல் பேவும் சரி, தயாரிப்பாளர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கும் சரி, என்னை எந்தத் தருணத்திலும் மோசமாக நடத்தவில்லை.

எனக்கு ஆதரவுக் குரல் கொடுக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த இரக்கமற்ற ஆணாதிக்கம் நிறைந்த துறையில், எனது நீண்ட, கடினமான பயணத்தில், உண்மையிலேயே மோசமான அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. அதில் பலரது பெயர்கள் இப்போது வைரலாகப் போக வேண்டும். ஆனால், இப்போதைக்கு அவை பாதுகாப்பாக எனது மனதில் சேமிக்கப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்