விஜய் பிறந்த நாள்: திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகனாக வலம் வருபவர் விஜய். இன்று (ஜூன் 22) தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். கரோனா அச்சுறுத்தலால் பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் சமூக வலைதளத்தில் பிரத்யேகமாக போஸ்டர் வடிவமைப்புகளை வெளியிட்டு விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அவற்றின் தொகுப்பு:

ஏ.ஆர்.முருகதாஸ்: பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜய் சார். இந்த வருடம் உங்களுக்கு நிறைய நிறைய மகிழ்ச்சியையும், அமைதியையும் தரட்டும்.

அட்லி: என்னோட அண்ணா, என்னோட தளபதி. என்னைவிட அவரை நான் அதிகமாக நேசிக்கிறேன், மதிக்கிறேன். அவருக்கு நிறைய கடன்பட்டிருக்கிறேன். நீங்கள் இல்லையென்றால் நான் ஒன்றுமே இல்லை அண்ணா. உங்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா.

ராஷி கண்ணா: பிறந்த நாள் வாழ்த்துகள் தளபதி விஜய் சார். என்றும், என்றும் சிறந்த ஆசீர்வாதங்கள் உங்கள் மீது பொழிய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

வெங்கட் பிரபு: நமக்கு மிகவும் பிடித்தமான தளபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் அண்ணா.

ரகுல் ப்ரீத் சிங்: பிறந்த நாள் வாழ்த்துகள் விஜய் சார். உங்களுக்கு எல்லாவற்றிலும் சிறந்ததே கிடைக்க வாழ்த்துகிறேன். நீங்கள் தொடர்ந்து மின்ன வேண்டும், எங்கள் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கம் தர வேண்டும்.

கல்யாணி ப்ரியதர்ஷன்: வழக்கமாக ஒரு நடிகையாக ட்வீட் செய்வேன். இன்று பரிசுத்தமான ஒரு ரசிகையாக ட்வீட் செய்கிறேன். பிறந்த நாள் வாழ்த்துகள் விஜய் சார்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து: பிறந்த நாள் வாழ்த்துகள் தலைவா. உங்களுக்கு என்றென்றும் நிறைய அன்பும், மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் வாய்க்க வாழ்த்துகிறேன்.

விஷால்: அன்புச் சகோதரர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அற்புதமான பிறந்த நாளாக இது அமையட்டும். உங்கள் வசீகரத்தை வைத்து இன்னும் பல வருடங்கள் எங்களுக்கு நீங்கள் பொழுதுபோக்கு தர வேண்டும். மாஸ்டருக்காகக் காத்திருக்கிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.

விக்ரம் பிரபு: சிறந்த (நடிகர்) விஜய் சாரை வாழ்த்துகிறேன். மாஸ்டர் தரும் பொழுதுபோக்குக்காகக் காத்திருக்கிறேன்.

சாந்தனு: ஒருமுறை சகோதரர் என்றால், என்றும் சகோதரர் தான். பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்