இனி சீனா தயாரிப்புகளை உபயோகிப்பதில்லை: சாக்‌ஷி அகர்வால்

By செய்திப்பிரிவு

இனி சீனா தயாரிப்புகளை உபயோகிப்பதில்லை என்று நடிகை சாக்‌ஷி அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல சீனா தரப்பிலும் 35-க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமாக வெளியிட மறுக்கிறது. சமீபத்தில் நடத்த மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.

இது தொடர்பாக இருநாடுகளுக்கு இடையே அமைதிக்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்றுள்ளது. இதனிடையே இந்தியாவில் பல்வேறு இடங்களில் சீன தயாரிப்புகளை வாங்கமாட்டோம் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மேலும், சீனாவில் தயாராகி பிரபலமாகியுள்ள செயலிகளையும் பலர் நீக்கி வருகிறார்கள்.

தற்போது இது தொடர்பாக நடிகை சாக்‌ஷி அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“பொறுமைக்கும் அமைதிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது நம் நாடு. ஆனால் சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்தி நம் நிலத்தை அபகரிக்க பார்க்கிறது. எனவே நான் இனிமேல் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்தப் போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளேன். மற்றவர்களும் இதைப் பின்பற்ற நான் முயற்சிகளை மேற்கொள்வேன்.

இதன் தொடக்கமாக, நான் எனது டிக்டாக் கணக்கை அகற்றியுள்ளேன். என்னைப் பொறுத்தவரை எனது நாடு தான் எனக்கு எதிலும் முதன்மையாக தோன்றும், என் நாட்டின் கண்ணியத்தைக் காக்க ஒரு குடிமகளாக செய்ய வேண்டியதைச் செய்ய நான் ஒருபோதும் தயங்கமாட்டேன்"

இவ்வாறு சாக்‌ஷி அகர்வால் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

மேலும்