காதலியைக் கரம் பிடிக்கும் ‘கும்கி’ அஸ்வின்

By செய்திப்பிரிவு

தனது காதலி வித்யாஸ்ரீயை ஜூன் 24-ம் தேதி திருமணம் செய்யவுள்ளார் 'கும்கி' அஸ்வின்.

தமிழ்த் திரையுலகில் பிரபலமான படத்தயாரிப்பு நிறுவனம் 'லட்சுமி மூவி மேக்கர்ஸ்'. 'கோகுலத்தில் சீதை', 'ப்ரியமுடன்', 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்', 'உன்னைத் தேடி', 'அன்பே சிவம்', 'புதுப்பேட்டை' உள்ளிட்ட பல வரவேற்பு பெற்ற படங்களைத் தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர் சுவாமிநாதன்.

சுவாமிநாதன் மகன் அஸ்வின். இவர் பிரபு சாலமன் இயக்கிய 'கும்கி' படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் 'பாஸ் (எ) பாஸ்கரன்', 'ஈட்டி', 'ஜாக்பாட்', 'கணிதன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் கே.கே.நகரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மகள் வித்யாஸ்ரீயைக் காதலித்து வந்தார். இவர் அமெரிக்காவில் எம்.எஸ். பட்டம் பெற்றவர். அஸ்வின் - வித்யாஸ்ரீ காதலுக்கு இரண்டு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்துவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, இவர்களது திருமணம் ஜூன் 24-ம் தேதி சூளைமேட்டில் உள்ள அஸ்வின் வீட்டில் நடைபெறவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் இருப்பதால், இந்தத் திருமணத்தில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்ளவுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

30 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்