ஆசியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக அறியப்படுபவர் ஜாக்கிசான். உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவரது நகைச்சுவையுடன் கூடிய சண்டைகாட்சிகளை விரும்பாதவர்களே இருக்கமுடியாது எனலாம்.
இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு ஜெட்லியுடன் இணைந்து நடித்த ‘தி ஃபார்பிட்டன் கிங்டம்’ திரைப்படம் குறித்த பல்வேறு தகவல்களை ஜாக்கிசான் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
''எனக்குத் திரைப்படங்கள் எடுப்பது மிகவும் பிடித்த விஷயம். ஏனென்றால் அப்போது யாருக்கும் பேட்டி கொடுக்க வேண்டியிருக்காது. பயணங்கள் செய்யவேண்டியிருக்காது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள வேண்டியிருக்காது.
» பிரெஞ்சு திரைப்பட விழா இணையத்தில் இலவசம்!- உங்கள் குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்
» விவாகரத்துதான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய தோல்வி: வில் ஸ்மித்
‘தி ஃபார்பிட்டன் கிங்டம்’ படத்துக்காக ஒரே ஹோட்டலில் 4 மாதங்கள் தங்கியிருந்தேன். எனக்குப் பயிற்சி எடுக்க நிறைய நேரம் இருந்தது. திரைப்படங்கள் எடுப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் ஒரு பயிற்சிதான்.
‘தி ஃபார்பிட்டன் கிங்டம்’ முதல் நாள் பல வேடிக்கையான சம்பவங்கள் நடைபெற்றன. சண்டைப் பயிற்சிகள் முடிந்து ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கத் தொடங்கினோம். நானும் ஜெட்லியும் எந்த ஒரு பன்ச்சையும் நாங்கள் விடவில்லை. எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இயக்குநரோ ‘இன்னொரு முறை போகலாம்’ என்றார். நானும் ஜெட்லியும் ஏன் என்று கேட்டோம். அதற்கு அவர் ‘நீங்கள் இருவரும் மிகவும் வேகமாக சண்டை போடுகிறீர்கள்’ என்றார். அப்போது நான் ஜெட்லியிடம், ‘மெதுவாக சண்டை போடுங்கள்’ என்றேன். பதிலுக்கு அவரும் ‘நீங்களும் மெதுவாக சண்டை போடுங்கள்’ என்றார். அந்தப் படத்துக்கு முன்னால் நாங்கள் இருவரும் நண்பர்களாக இருந்தோம். அதன்பிறகு மிகவும் நல்ல நண்பர்களாகி விட்டோம். இப்போதும் நண்பர்களாகவே இருக்கிறோம்''.
இவ்வாறு ஜாக்கிசான் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago