சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து நடிகையாக வலம் வரும் நிஹாரிகாவுக்குத் திருமணம் முடிவாகியுள்ளது.
சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து நடிகையாக வலம் வருபவர் நிஹாரிகா. 2016-ம் ஆண்டு 'ஓகா மனசு' என்ற தெலுங்குப் படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
இதுவரை ஒட்டுமொத்தமாக 5 படங்கள் மட்டுமே நடித்துள்ளார். இறுதியாக சிரஞ்சீவி நடித்த 'சைரா நரசிம்மா ரெட்டி' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு அவருக்குத் திரையுலகில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
அவ்வப்போது நிஹாரிகாவுக்குத் திருமணம் என்று வதந்திகள் பரவும். அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு பிரபாஸுடன் திருமணம் எனத் தகவல் பரவியது. அதற்கு தனது இன்ஸ்டாகிராம் பதிவில் மறுப்பு வெளியிட்டார்.
இதனிடையே, இன்று (ஜூன் 18) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரை அணைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நிஹாரிகா. அவரது முகம் தெரியாததால், அவர் யாரென்று தெரியவில்லை. இந்தப் புகைப்படத்தின் மூலம் தனக்குத் திருமணம் முடிவாகியிருப்பதை உறுதி செய்துள்ளார் நிஹாரிகா.
அவர் திருமணம் செய்யவுள்ளவர் திரையுலகைச் சேர்ந்தவர் அல்ல என்று தகவல் வெளியாகியுள்ளது. பெற்றோர் பார்த்த மாப்பிள்ளைதான் என்றும், 2021-ம் ஆண்டு பிப்ரவரியில்தான் திருமணம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மணமகன் யாரென்ற தகவலை நிஹாரிகாவின் வீட்டார் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago