கோகுல் இயக்கத்தில் உருவாகும் கொரோனா குமார்

By செய்திப்பிரிவு

கோகுல் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்துக்கு 'கொரோனா குமார்' எனப் பெயரிடப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கோகுல் இயக்கத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'. இதில் விஜய் சேதுபதி, நந்திதா, பசுபதி, சூரி, 'நான் கடவுள்' ராஜேந்திரன், மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இடம்பெற்ற வசனங்கள், காட்சிகள் எல்லாம் இப்போதும் மீம்ஸ்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்திலிருந்த கதாபாத்திரங்களுள் ஒன்றை மட்டும் எடுத்துத் தனியாகப் படமாக்கவுள்ளார். இந்தப் பாணி ஹாலிவுட்டில் மிகவும் பிரபலம். அவ்வாறு அந்தக் கதாபாத்திரம் ஒரு விஷயத்தைத் திட்டமிடும்போது, கரோனா லாக்டவுன் அறிவித்துவிடுகிறார்கள். அதன் பின் நடக்கும் சுவாரசியங்களை, காமெடியாக 'கொரோனா குமார்' படத்தில் சொல்லவுள்ளார்கள்.

ஒட்டுமொத்தப் படமும் ஊரடங்கு மற்றும் தனிமைக் காலங்களில் நடைபெறுகிறது. விரைவில் படக்குழு பற்றிய தகவல்கள் அறிவிக்கப்படவுள்ளன. ஊரடங்கு விலக்கப்பட்டதும் அரசு விதித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி உடனடியாக படப்பிடிப்பு தொடங்கவுள்ளது படக்குழு.

இந்தப் படத்தை சினிமாவாலா பிக்சர்ஸ் சதீஷ் தயாரிக்கவுள்ளார். இதில் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்ற விவரத்தை விரைவில் அறிவிக்கவுள்ளார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்