குழந்தைகள் புற்றுநோய் தடுப்புக்காக ஆன்லைனின் நிதி திரட்டும் கேயானு ரீவ்ஸ்

‘தி மேட்ரிக்ஸ்’, ‘ஸ்பீட்’ 'ஜான் விக்’ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் கேயானு ரீவ்ஸ். இவரது தங்கை கிம் ரீவ்ஸ் கடந்த 1991 முதல் இரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். எனினும் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் 1999ஆம் ஆண்டு புற்றுநோயிலிருந்து முற்றிலுமாக மீண்டு வந்தார்.

தன் தங்கையை குணப்படுத்திய மருத்துவமனைக்கு ‘தி மேட்ரிக்ஸ்’ படத்தின் மூலம் கிடைத்த தொகையில் 70 சதவீதத்தை கேயானு ரீவ்ஸ் வழங்கியதாக கூறப்பட்டது. இது தவிர இன்று வரை புற்றுநோய்க்கு எதிராக விழிப்புணர்வில் ஈடுபட்டு வருவதோடு ஏராளமான நிதியுதவிகளும் ரீவ்ஸ் செய்து வருகிறார்.

இந்நிலையில் ‘கேம்ப் ரெயின்போ கோல்டு’ என்னும் அமைப்பு நடத்தும் ஆன்லைன் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புற்றுநோய் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்காக நிதி திரட்டுகிறார் கேயானு ரீவ்ஸ். இதில் அவரும் ஒருமிகப்பெரிய தொகையை வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நடக்கவிருந்த இந்த நிகழ்ச்சி கரோனா அச்சுறுத்தலாம் தள்ளிவைக்கப்பட்டு தற்போது ஆன்லைன் நிகழ்ச்சியாக நடக்கிறது.

ஜூன் 15ஆம் தேதி தொடங்கிய இந்த ஆன்லைன் நிகழ்வு வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE