'அன்பே சிவம்' வசூல் ரீதியாகவும் நன்றாக ஓடியிருக்க வேண்டும்: குஷ்பு

By செய்திப்பிரிவு

'அன்பே சிவம்' வசூல் ரீதியாகவும் நன்றாக ஓடியிருக்க வேண்டும் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

கமல், மாதவன், நாசர், கிரண் மற்றும் பலர் நடிக்க, சுந்தர்.சி இயக்கிய படம் ‘அன்பே சிவம்’. வித்யாசகர் இசையமைக்க, லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தினைத் தயாரித்தது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை அனைத்துமே கமல் தான். இயக்குநர் பொறுப்பை சுந்தர்.சி மேற்கொண்டார்.

2003-ம் ஆண்டு வெளியான இப்படம் மக்களிடையே போதிய வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், கமலின் நடிப்பிற்குப் பெரும் பாராட்டும் கிடைத்தது. இந்தப் படத்தின் தோல்வியால், சுந்தர்.சி 2 ஆண்டுகளுக்குப் பின் தான் அடுத்த படத்தையே இயக்கினார்.

பல பேட்டிகளில் 'அன்பே சிவம்' படத்தின் தோல்வி தன்னை எந்த அளவுக்குப் பாதித்தது என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார் இயக்குநர் சுந்தர்.சி. இதனிடையே, ஐஎம்டிபி தளத்தில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற படம் 'அன்பே சிவம்' தான் எனவும், 10-க்கு 8.7 ஸ்டார்களைப் பெற்றிருக்கிறது என்றும் குஷ்புவின் ட்விட்டர் தளத்தைக் குறிப்பிட்டு கமல் ரசிகர் ஒருவர் தெரிவித்தார்.

அவருக்குப் பதிலளிக்கும் விதமாக குஷ்பு தனது ட்விட்டர் பதிவில், "இந்தப் படம் வசூல் ரீதியாகவும் நன்றாக ஓடியிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இதன் பிறகு என் கணவர் 2 வருடங்கள் வீட்டில் (சும்மா) உட்கார்ந்திருக்க மாட்டார்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்