எனது 45 வருட நண்பர்களை கோவிட்-19 எடுத்துக்கொண்டது: பியர்ஸ் ப்ராஸ்னன் வருத்தம்

By பிடிஐ

தனது இரண்டு நண்பர்கள் கோவிட்-19 தொற்றால் மரணமடைந்துள்ளதாக ஹாலிவுட் நடிகர் பியர்ஸ் ப்ராஸ்னன் கூறியுள்ளார்.

ஜேம்ஸ்பாண்ட் பட நாயகனாக நடித்துப் பிரபலமானவர் நடிகர் பியர்ஸ் ப்ராஸ்னன். தனது நண்பர்கள் மரணம் குறித்து சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

"கோவிட்-19 தொற்றால் எனது இரண்டு நண்பர்கள் இறந்துவிட்டனர். அவர்கள் கடந்த 45 வருடங்களாக என் நண்பர்கள். அதில் ஒருவரின் மகனுக்கு நான் காட்ஃபாதராக இருக்கிறேன். நீங்கள் எங்கு இருந்தாலும், அங்கு நிலை எவ்வளவு அழகாக இருந்தாலும் உங்களைச் சுற்றி இந்த மோசமான அச்சுறுத்தல் இருக்கிறது.

தொடர்ந்து நாம் முயன்று கொண்டே இருக்க வேண்டும். வாழ்க்கையில் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும். நாம் போரில் இருக்கிறோம். மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். இதெல்லாம் முடிந்து சகஜ நிலை திரும்பும்போது, நமது நிச்சயமற்ற பூமியைப் பற்றிப் புரிந்த பிறகு, நம்மிடையே கனிவும், விழிப்புணர்வும் இன்னும் அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்று பியர்ஸ் ப்ராஸ்னன் ஒரு பத்திரிகையில் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.

கோவிட்-19 தொற்று ஆரம்பித்த கட்டத்தில் ப்ராஸ்னன், டிஸ்னியின் 'சிண்ட்ரெல்லா' திரைப்படத்தில் நடித்து வந்தார். தொற்று பரவுகிறது என்று தெரிந்தவுடன், உடனடியாக ஹவாயில் இருக்கும் தனது மனைவி, மக்களுடன் இருப்பதற்குத் திரும்பிவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்