விரைவில் ‘க்ளாடியேட்டர்’ இரண்டாம் பாகம்? - ரிட்லி ஸ்காட் முயற்சி

By ஐஏஎன்எஸ்

2000ஆம் ஆண்டு ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் வெளியான படம் ‘க்ளாடியேட்டர்’. இதில் ரஸ்ஸல் க்ரோவ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் வெளியாகி 20 ஆண்டுகள் கழிந்துவிட்டாலும் இன்றளவும் வரலாற்றுப் படங்களுக்கு இப்படம் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. ஒரு காட்சியிலாவது இப்படத்தின் தாக்கம் இல்லாமல் எடுக்கமுடியாத அளவுக்கு காட்சிகளை அமைத்திருப்பார் ரிட்லி ஸ்காட்.

இப்படம் உலகமெங்கும் 400 மில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்தது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒலி, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட ஐந்த ஆஸ்கர் விருதுகளையும் குவித்தது.

‘ஜோக்கர்’ படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்ற ஹாக்கின் ஃபீனிக்ஸ்தான் இப்படத்தின் வில்லன்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை ‘க்ளாடியேட்டர்’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான டக் விக் உறுதி செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

‘க்ளாடியேட்டர்’ இரண்டாம் பாகத்தை எடுக்க ரிட்லி ஆவலாக இருக்கிறார். அதற்கு முதலில் கதையை தயார் செய்யவேண்டும். முதல் பாகத்தில் பணிபுரிந்த அனைவரும் அதை மிகவும் விரும்புகிறோம்.

ஆனால் அதற்கான கதையை உருவாக்குவதில் பிரச்சினை இருக்கிறது. அதை சரியான இடத்தில் வைக்க வேண்டும். அதற்கான வேலைகளில் ரிட்லி ஸ்காட் ஈடுபட்டு வருகிறார். அதை சரியான இடத்திலிருந்து தொடங்க வேண்டும். அது ஒரு மிகப்பெரிய சவால்.

இவ்வாறு டக் விக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE