உள்நாட்டு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டதால் நடிகை ரகுல் ப்ரீத் சிங் மும்பையிலிருந்து டெல்லிக்கு விமானப் பயணம் மேற்கொண்டார்.
தனிப்பட்ட பாதுகாப்புக் கவச உடை, கையுறை, முகக் கவசம் என மொத்தமாக உடலை மறைத்து அவர் மேற்கொண்ட இந்தப் பயணம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரகுல் ப்ரீத் சிங் பகிர்ந்துள்ளார். விமானப் பயணத்துக்கான திட்டம் என்று இதற்குப் பெயரை வைத்து, தான் முழு கவச உடையில் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இதன் பிறகு ஒரு வீடியோவைப் பகிர்ந்திருக்கும் அவர், "ஹாய் மக்களே, இப்படி நாம் பயணப்பட வேண்டிய நேரம் வரும் என்று யார் நினைத்துப் பார்த்திருப்பார்கள். காலணிகளைக் கூட மூடியிருக்கிறேன். இங்கு நான் யாரைச் சந்தித்தேன் பாருங்கள்" என்று பேசி தனது மொபைல் கேமராவைத் திருப்ப அங்கு விமான நிலையத்தில் ரகுல் ப்ரீத்தின் அடுத்த திரைப்படத்தின் இயக்குநர் லக்ஷ்யாராஜ் ஆனந்த் உட்கார்ந்திருக்கிறார்.
லக்ஷ்யாவும் முழு கவச உடையில் அங்கு உட்கார்ந்திருக்க, கேமராவைப் பார்த்ததும், "நான் விண்வெளிக்குச் செல்கிறேன்" என்று நகைச்சுவையாகக் கூறுகிறார். தொடரும் ரகுல், "அவர் விண்வெளிக்குச் சென்று அட்டாக் செய்யவுள்ளார். நாங்கள் அட்டாக் படத்தின் படப்பிடிப்பை நடத்தியிருக்க வேண்டியது. அதுதான் என் இயக்குநர். நாங்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்கிறோம்" என்று கூறி முடித்துள்ளார்.
» மீண்டும் இணையும் அஜித் - விஷ்ணுவர்தன் கூட்டணி?
» ஷங்கர் தயாரித்தால் மட்டுமே 'ஈரம் 2': இயக்குநர் அறிவழகன் உறுதி
சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்கி வரும் பிரபலங்களில் ரகுல் ப்ரீத் சிங்கும் ஒருவர். இவரை இன்ஸ்டாகிராமில் 1.41 கோடி பயனர்கள் பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
30 mins ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago