'டெனட்' திரைப்படத்தில் டிம்பிள் கபாடியாவின் நடிப்பும், அவருடன் நடித்த அனுபவமும் அற்புதமாக இருந்ததாக கென்னெத் ப்ரானா கூறியுள்ளார்.
'இன்செப்ஷன்', 'டார்க் நைட்', 'இண்டர்ஸ்டெல்லர்' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த திரைப்படம் 'டெனட்'. அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை சினிமா ஆர்வலர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. உலக அளவில் நிலவும் கரோனா பதற்றம் மற்றும் ஊரடங்குக்கு நடுவில், ஜூலை மாதம் திரையரங்குகள் திறக்கப்பட்டால் அதில் முதல் திரைப்படமாக 'டெனட்' வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு இந்தப் படத்தின் ஜூலை 17 என்ற வெளியீட்டுத் தேதியை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் மாற்றவில்லை.
ஜான் வாஷிங்டன், ராபர்ட் பாட்டின்ஸன், கென்னெத் ப்ரானா, மைக்கேல் கெய்ன், டிம்பிள் கபாடியா உள்ளிட்ட எண்ணற்ற நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ஆக்ஷன், அறிவியல் புனைவுத் திரைப்படம் இது. இந்திய நடிகை டிம்பிள் கபாடியா இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் இவரது இருப்பு குறித்து பேசியுள்ளார் சக நடிகர் கென்னெத் ப்ரானா.
"அவருக்குப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம். அவர் நடிப்பது குறித்து எங்கள் இயக்குநர் நோலன் ஆர்வத்துடன் இருந்தார். மேலும் எங்கள் நாயகன் ஜான் வாஷிங்டன் அவருடன் இணைந்து நடித்து முடிக்கும்போது அவரைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த அளவுக்கு அனைவரையும் அவர் ஈர்த்துவிட்டார். எனக்கு அவருடன் காட்சிகள் இல்லையென்றாலும் படத்தில் அவரது இருப்பு எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும்.
» சிரஞ்சீவி - பாலகிருஷ்ணா மோதலா? என்ன நடக்கிறது தெலுங்கு திரையுலகில்?
» 'அந்தாதூன்' Vs 'தும்பாட்': தலைசிறந்த திரைப்படம் எது? - ட்விட்டரில் ரசிகர்கள் கருத்து
அவர் வந்திறங்குகிறார் எனும்போது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் தான் மிகவும் பதற்றமாக உணர்வதாகச் சொன்னார். பின் நோலன் அவரை வைத்து ஒத்திகை பார்த்தார். முடித்துவிட்டு வந்து, இதுவே பதற்றம் என்றால் அப்போது அமைதியாக இருந்தால் எந்த அளவு நடிப்பாரோ என்று ஆச்சரியப்பட்டனர். ஏனென்றால் அவ்வளவு கச்சிதமாக நடித்திருந்தார். படக்குழுவுடனும் மிக அன்பாக நடந்து கொண்டார். எனவே எல்லோர் மத்தியிலும் நன்மதிப்பைப் பெற்றுவிட்டார்" என்று கென்னெத் ப்ரானா கூறியுள்ளார்.
டிம்பிள் கபாடியா, நடிகர் ராஜேஷ் கண்ணாவின் முன்னாள் மனைவி. 'பாபி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, 'காஷ்', 'த்ரிஷ்டி', 'ருடாலி 'உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமானவர். தமிழில் கமல்ஹாசனுடன் 'விக்ரம்' திரைப்படத்தில் இளவரசி கதாபாத்திரத்தில் நடித்திருந்தது நினைவுகூரத்தக்கது. இவரது மகள் ட்விங்கிள் கண்ணா, மருமகன் அக்ஷய் குமார் என அனைவரும் பாலிவுட்டுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago